இந்திய ரூபாயில் வர்த்தம் – வணிகர் சங்கம் வரவேற்பு
2022-07-14 17:13:42

இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் இந்திய ரூபாயிலேயே வரவு-செலவுகளை மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு வணிகச் சங்கங்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

ரஷிய-உக்ரனை மோதலைத் தொடர்ந்து, ரஷியா மீது மேலை நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இச்சூழலில், ரஷியா மற்றும் அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தை எளிதாக்கும் விதம் இப்புதிய முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய ரூபாயை சர்வதேசமயமாக்கும் நீண்டகால இலக்குக்கும் இம்முடிவு உதவிகரமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய ரூபாயை அடிப்படையாக வைத்து, ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள விரும்பும் நாடுகளுக்கு இப்புதிய அறிவிப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும். தற்போதுவரை, சர்வதேச வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலரே அடிப்படை நாணயமாக இருந்து வருகிறது.