குளியல் சுதந்திரத்தை இழந்த ஐரோப்பிய மக்கள்
2022-07-15 11:23:25

ஜுலை 11 முதல் 21ஆம் நாள் வரை, ரஷியாவிடமிருந்து ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயு ஏற்றிச்செல்லும் நோர்த் ஸ்ட்தீம்-1 என்ற குவாய், பராமரிப்புப் பணிக்காக இடைநிறுத்தத்தில் இருப்பதால், ஐரோப்பாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியாவுக்கும் உக்ரேனுக்குமிடையிலான மோதல் நிகழ்ந்த பிறகு, ஐரோப்பா அமெரிக்காவையடுத்து ரஷியாவின் மீது தடை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதனால், ஐரோப்பாவுக்கு வினியோகிக்கும் இயற்கை எரிவாயுவை ரஷியா குறைத்துள்ளது.

அதேவேளை, எரியாற்றல் பற்றாகுறையால், தீவிரமாகி வரும் பண வீக்கம் ஐரோப்பாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்ப அரசியல்வாதிகள், அமெரிக்காவுடன் இணைந்து ரஷியா மீது மேற்கொண்ட தடை நடவடிக்கை ஐரோப்பிய மக்களைக் கடுமையாக பாதித்துள்ளது என்று ஐரோப்பாவின் பொது மக்கள் கருதுகின்றனர்.

ஒரு தரப்பு தடை நடவடிக்கை பிரச்சினையை தீர்க்க உதவாது. அது மேலும் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஐரோப்பிய அரசியல்வாதிகள் பயனுள்ள வழிமுறையில் நெருக்கடியைச் சமாளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.