கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
2022-07-15 17:09:38

இந்தியாவில் முதல்முறையாக கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மத்திய உயர்நிலைக் குழு கேரள மாநிலம் சென்று ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கியது.

முன்னதாக, விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட நுழைவுப் பகுதிகளில் குரங்கு அம்மை நோய் தொற்று இருக்கலாம் என ஐயத்துக்குரிய நபர்கள் மீதான பரிசோதனை மற்றும் ஆய்வுகளை அனைத்து மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

அத்துடன், குரங்கு அம்மை நோய் சிகிச்சைக்கான மருத்துவமனைகள் உள்ளனவா மற்றும் தேவையான மருந்து வளங்கள், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.