இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் சீனப் பொருளாதார அதிகரிப்பு
2022-07-15 16:51:10

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 15ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின் படி, இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 56 இலட்சத்து 26 ஆயிரத்து 420 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டை விட 2.5 விழுக்காடு அதிகமாகும்.

முதல் 6 மாதங்களில், கோடைகால தானிய விளைச்சல் 14 கோடியே 73 இலட்சத்து 90 ஆயிரம் டன்னாகும். இது, கடந்த ஆண்டை விட, 14 இலட்சத்து 34 ஆயிரம் டன் அதிகமாகும். சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்புத் தொகை, கடந்த ஆண்டை விட 3.4 விழுக்காடு அதிகமாகும். சமூக நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை, கடந்த ஆண்டை விட 0.7 விழுக்காடு குறைவாகும். சரக்குகளின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை, கடந்த ஆண்டை விட 9.4 விழுக்காடு அதிகமாகும்.