இலங்கைக்குச் சீனா தானிய உதவி
2022-07-15 16:49:52

இலங்கைக்குச் சீனாவின் இரண்டாவது தொகுதி தானிய உதவியின் ஒப்படைப்பு நிகழ்வு 14ஆம் நடைபெற்றது. 

இம்முறை 1000 டன் அரிசி வழங்கப்பட்டது. மொத்தாக, 10 ஆயிரம் டன் அரிசி வழங்க சீனா திட்டமிட்டுள்ளது. இலங்கைக்கு உதவி வரும் சீன அரசுக்கு இலங்கை கல்வி அமைச்சகத்தின் செயலாளர் ரணசிங்க நன்றி தெரிவித்தார். 

மேலும், இலங்கை எதிர்கொண்டுள்ள இன்னல்களைச் சமாளிக்கும் வகையில் மருந்துகள், எரிபொருள், அரிசி முதலிய மொத்தம் 50 கோடி யுவான் மதிப்புள்ள அவசர மனித நேய உதவி இலங்கைக்கு வழங்கப்படும் என்று சீனா கடந்த ஏப்ரல் முதல் மே வரை அறிவித்தது.

இலங்கை பற்றி செய்தியாளர்களின் கேளிவிக்குச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 15ஆம் நாள் பதிலளிக்கையில், தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து, அந்நாட்டின் இன்னல்களைச் சமாளிக்கவும் கடன் சுமையைத் தணிவு செய்யவும், தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்கவும் சீனாத் தொடர்ந்து ஆக்கப்பூர்வ பங்காற்ற விரும்புகின்றது என்றார் அவர்.