சீனாவின் உயர் மின்னழுத்த திட்டப்பணி கட்டுமானம்
2022-07-15 14:58:13

சீனாவின் பாய்ஹேதான்-சேஜியாங் உயர் மின்னழுத்த திட்டப்பணியைச் சேர்ந்த ஹுபெய் மாநிலத்தின் மேற்குப் பகுதி தற்போது என்ஷி நகரில் காலதாமதமின்றி கட்டியமைக்கப்பட்டு வருகின்றது. சீனாவில் மின்சாரத்தை மேற்கிலிருந்து கிழக்கிற்கு அனுப்புவது என்ற நெடுநோக்கின் முக்கியத் திட்டப்பணி இதுவாகும். சி ச்சுவான், ச்சொ ச்சிங், ஹுபெய், அன்ஹுய், சேஜியாங் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் மாநகரங்கள் இத்திட்டப்பணியின் நெடுகில் உள்ளன.