மீட்சி அடைந்து வரும் சீனப் பொருளாதாரம்
2022-07-15 20:05:26

இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 56 இலட்சத்து 26 ஆயிரத்து 420 கோடி யுவான் என்று 15ஆம் நாள் வெளியிட்டப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.5 விழுக்காடு அதிகமாகும். ஏப்ரல் மற்றும் மே திங்களில் சில உற்பத்தி தேவை குறியீடுகள் வீழ்ச்சியடைந்த நிலையில், இச்சாதனை, சீனப் பொருளாதாரத்தின் உறுதியைக் காட்டியுள்ளது.

தானியம் மற்றும் எரியாற்றல் உற்பத்தியை நன்கு மேற்கொள்வது, விலைவாசியை நிலைப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் சீனாவில் மாபெரும் சந்தை, உறுதியான வளர்ச்சி, சீர்திருத்தச் சலுகை முதலிய மேம்பாடுகள் தொடர்ந்து வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.