ஜியௌஹெ பண்டைய நகரில் கலாச்சாரப் பரிமாற்றம்
2022-07-16 18:17:52

ஜூலை 14ஆம் நாள் மாலை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் துர்ஃபான் நகரிலுள்ள ஜியௌஹெ பண்டைய நகர இடிபாடுகள் என்ற இடத்துக்கு சென்று கலச்சார பாரம்பரிய பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அறிந்துக் கொண்டார்.

ஜியௌஹெ பண்டைய நகர இடிபாடுகள், 37.6ஹெக்டர் நிலப்பரப்பைக் கொண்டது. உலகிலேயே மிகவும் முழுமையாகப் பேணிக்காக்கப்பட்டு மிகவும் நீண்டகாலம் மற்றும் மிகவும் பெரிய மண் கட்டமைப்பு கொண்ட பண்டைய நகராக அது விளங்குகிறது.

பட்டுப்பாதையில் முக்கியமான போக்குவரத்து வழி ஆகும். 5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறுடைய சீனத் தேச நாகரிகத்தின் முக்கிய சாட்சியுமாகும். வரலாற்று ஆய்வில் அதற்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. தொல்பொருட்கள் மற்றும் கலச்சார பாரம்பரியங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தி சீனத் தேச பண்பாட்டின் சர்வதேச செல்வாக்கைத் தொடர்ந்து விரிவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.