விண்வெளி வீரர்களை ஏற்றிச்செல்வதில் ரஷியா-அமெரிக்க ஒத்துழைப்பு
2022-07-17 17:41:02

ரஷியா மற்றும் அமெரிக்காவின் விண்கலத்தை அடுத்தடுத்து பயன்படுத்தி இரு நாடுகளின் விண்வெளி வீரர்களைச் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குக் கொண்டு செல்லும் உடன்படிக்கையை ரஷிய தேசிய விண்வெளி நிறுவனமும் அமெரிக்க தேசிய வானூர்தி மற்று விண்வெளி நிறுவனமும் உருவாக்கியுள்ளன. ரஷிய தேசிய விண்வெளி நிறுவனம் 15ஆம் நாள் இத்தகவலை அறிவித்துள்ளது.

கலப்பு முறையில் இரு நாடுகளின் விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் பயணிக்கும் இந்த உடன்படிக்கை ஜூலை 14ஆம் நாள் கையொப்பமிடப்பட்டது.