உணவுப் பாதுகாப்பு மற்றும் பண வீக்கத்தை ஒத்துழைப்புடன் சமாளிக்க வேண்டும்
2022-07-17 17:07:36

20 நாடுகள் குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் மாநாடு 16ஆம் நாள் இந்தோனேசியாவின் பாலி தீவில் நிறைவு பெற்றது. அதில் உணவுப் பாதுகாப்பு, பண வீக்க கட்டுப்பாடு உள்ளிட்ட விவகாரங்களில் ஒத்த கருத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது உலகம் பல அறைகூவல்களை எதிர்நோக்கியுள்ளது. பல்வேறு தரப்புகள் நம்பிக்கையின்மைப் பிரச்சினையைச் சமாளிக்க வேண்டும் என்று இந்தோனேசிய நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இதற்குப் பின்பு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி, காலநிலை மாற்றம், கோவிட்-19 தடுப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. உலகத்திற்கு மேலதிக ஒத்துழைப்புகள் தேவைப்படும். எந்த ஒரு நாடும் உலகளாவிய அறைகூவலைத் தனியாகச் சமாளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.