© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பிரிட்டன் வரலாற்றில் அதிக வெப்பநிலை குறித்து முதலாவது சிவப்பு நிற எச்சரிக்கையை அந்நாட்டு வானிலை மையம் 15ஆம் நாள் வெளியிட்டுள்ளது. மேலும், 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடும் வெப்பம் குறித்து தேசிய அவசரநிலையை பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் வானிலை மையத்தின் கணிப்பின்படி, அடுத்த வாரம், இலண்டன் உள்ளிட்ட இங்கிலாந்தின் பெரும்பான பகுதிகளில், அதிகப்பட்ச வெப்பநிலை , 40 டிகிரி செல்சியஸை எட்டக் கூடும். பிரிட்டனின் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டுவதற்கு 80 விழுக்காட்டு சாத்தியம் உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்து. பிரிட்டனின் அதிகாரப்பூர்வமான பதிவுகளின்படி மிக அதிகமான வெப்பநிலை 38.7 டிகிரி செல்சியஸ் நிலவியது. 2009ஆம் ஆண்டு ஜுலை 25ஆம் நாள் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தின் தாவரத் தோட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை, சில பகுதிகளில் நீர் மற்றும் மின் விநியோகம், தொலைத்தொடர்பு சேவை ஆகியவை தற்காலிமாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. பொது மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கை மற்றும் பணி முறையைச் சரிச் செய்து, வெளியே நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
காலநிலை மாற்றத்தினால், உலகளவில் அதி தீவிர வானிலை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், பிரிட்டன் இந்த இத்தகைய அதி தீவிர வானிலைக்கு தயாராக இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.