தியன்சோ 3 சரக்கு விண்கலம் கடமைகளை நிறைவேற்றுதல்
2022-07-17 15:26:01

தியன்சோ-3 சரக்கு விண்கலம் திட்டமிட்ட அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி ஜூலை 17ஆம் நாள் காலையில் சீன விண்வெளி நிலையத்தை விட்டுச் சென்றதாகச் சீன மனிதர்களை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டப்பணி அலுவலகம் அறிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் தியன்சோ-3 சரக்கு விண்கலம் சீனாவின் ஹைனா மாநிலத்திலுள்ள வென்ச்சாங் ஏவு தளத்திலிருந்து ஏவப்பட்டு விண்வெளி நிலையத்துக்கு 6 டன் எடையுள்ள பொருட்களை அனுப்பியுள்ளது. தற்போது அதன் இயக்க நிலை சீராக இருக்கின்றது.