ஃபைனான்சியல் டைம்ஸ்:அமெரிக்கா வளர்ந்த பொருளாதாரம் போல இருக்காது
2022-07-17 17:35:20

இன்றைய அமெரிக்காவில், அரசியல் இடர்பாடு அதிகரித்து, சமூகப் பிரிவினை ஆழமாகி வருகிறது. அரசு மீது மக்களின் நம்பிக்கை வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக குறைந்த நிலையில் உள்ளது. தற்போதுள்ள அமெரிக்கா வளர்ந்த பொருளாதாரம் போல இருக்காது.

‘அமெரிக்கா ஒரு வளர்ந்து வரும் சந்தையைப் போல இருக்க தொடங்குகிறதா என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றை ஃபைனான்சியல் டைம்ஸ் என்ற பிரிட்டன் பத்திரிகை அண்மையில் வெளியிட்டு, இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

இன்று அமெரிக்காவின் பல இடங்களில் பெரிய துப்பாக்கிச் சூடுகள் இடைவிடாமல் நிகழ்ந்து வருகிறது. பணவீக்கம் விரைவாக உயர்ந்து வருகிறது. இவற்றைக் கருதி, முதலீட்டாளர்கள் சிலர் விவாத்தபோது அரசியல் ரீதியிலான இடர்பாடுகள் மற்றும் உறுதியற்ற தன்மை குறித்து,  வளர்ந்த பொருளாதாரத்திற்கு மாறாக, அமெரிக்கா ஒரு வளர்ந்து வரும் சந்தையை போல இருக்க தொடங்குகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.