சீனா தயாரித்த ஏ ஆர் ஜேய்21 விமானம் மூலம் 50 இலட்சம் பேர் பயணம்
2022-07-18 10:53:37

சீனா தயாரித்த ஏ ஆர் ஜேய்21 விமானம் மூலம் 50 இலட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். சர்வதேசப் பயணியர் விமானத் துறையில் இந்த எண்ணிக்கை, விமானத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையின் முழுமையான வெற்றியைக் காட்டுகிறது.

இதுவரை 68 ஏ ஆர் ஜேய் 21 விமானங்கள், 9 விமான நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதற்கு, 110 நகரங்களுக்கிடையில் 263 விமான நெறிகள் திறக்கப்பட்டுள்ளன. விமானச் சேவை அளவை விரிவாக்கும் வகையில், உலகளவில் கடல் மட்டத்திலிருந்து மிக உயர்மான டோ செங் யா டிங் விமான நிலையத்தில், ஏ ஆர் ஜேய் 21, பீடபூமி சோதனை பறத்தலை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.