நேபாளத்தில் 10 விதமான பொருள்களின் இறக்குமதிக்கு தடை
2022-07-18 10:52:32

நேபாளத்தில், அன்னியச் செலவாணி கையிருப்பு குறைவதைத் தடுக்கும் விதம், 10 விதமான பொருள்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, ஆகஸ்ட் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப்பட்ட அரசின் அறிவிக்கையில், 300 டாலருக்கும் மேல் உள்ள அறிதிறன்பேசிகள், 150 சிசி என்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மதுபானங்கள், புகையிலைப் பொருள்கள், வைரம், பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகள், சில வாகனங்கள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் இறுதியில் விதிக்கப்பட்ட இத்தடை, தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அன்னியச் செலாவணி கையிருப்பில் எவ்வித புதிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால், அத்தியாவசியமற்ற இறக்குமதிப் பொருள்களுக்குத் தடை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று மூத்த பொருளியலாளர் கேசவ் ஆச்சார்யா தெரிவித்தார்.