சீனாவுக்கான இலங்கை தூதரின் வேண்டுகோள்
2022-07-18 10:58:25

இலங்கை தனது கடுமையான கடன் பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கிறது. சீனாவுக்கான இலங்கை தூதர் பாலித கொஹொன 15ஆம் நாள் குளோபல் டைம்ஸ் செய்தியாளருக்கு அளித்த சிறப்பு பேட்டியில், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் மேலை முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை தற்போது இலங்கைக்கு மிக அதிக கடன் வழங்குபவர்களாக உள்ளனர். கடன் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், உலக வங்கி ஆசிய வளர்ச்சி வங்கி முதலியவை, குறிப்பிட்ட திட்டங்களை முன்வைக்க வேண்டும் என இலங்கை விரும்புகின்றது. இலங்கை சீனாவின் கடன் பொறிக்குள் விழந்துள்ளது எனற மேலை நாடுகளின் பரப்புரைக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று அவர் கூறினார்.

வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் செய்திகளின் படி, இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் சுமார் 5100 கோடி அமெரிக்க டாலராகும். அதன் அன்னிய செலாவணி கையிருப்புத் தொகை மிகக் குறைவு. இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் சுமார் 10 விழுக்காடு மட்டுமே சீனாவின் கடனாக உள்ளது.

மேலும், சீனா உள்ளிட்ட ஒத்துழைப்புக் கூட்டாளி நாடுகள் இலங்கைக்கு மேலதிக உதவிகளை வழங்குமாறு கொஹொன கேட்டுகொண்டார். இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவு இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து மிக முக்கியமான பங்கு ஆற்றும் என்றார் அவர்.