வன்முறை ஆட்சிக்குத் திரும்பும் அமெரிக்கா
2022-07-18 16:28:23

பிளாக் ஸ்டா நியூஸ் இணையதளத்தில் வெளியாகிய ஒரு கட்டுரையில், நாம் சகோதரர்கள் போல் கூட்டாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது முட்டாள்கள் போல ஒன்றாக அழிவோம் என்று மார்டின் லூதர் கிங் ஜுனியர் எங்களுக்கு நினைவூட்டினார். இதில் உடன்பாடு இல்லாதவர்கள், தங்களிடம் உள்ள ஆயுதத்தைப் பயன்படுத்த விரும்புபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மகாத்மா காந்தி போதித்த அஹிம்சை வழியை நாடுங்கள். அவரது கூற்றின்படி, தற்காப்புக்காக கொலை செய்வது தேவையற்றது. ஒருவருக்கு இறப்பதற்கான துணிவையே கொண்டிருக்க வேண்டும். வெறுப்புணர்வைப் பரப்புவோர், கோழைகள் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.