மத்திய கிழக்குப் பிரதேசத்தில் தோல்வியடைந்த பைடன்
2022-07-18 17:03:26

மத்திய கிழக்குப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், 17ஆம் நாள் வாஷிங்டனுக்குத் திரும்பினார்.

மத்திய கிழக்குப் பிரதேசத்தின் மீதான கொள்கை தோல்வியடைந்துள்ளதை இப்பயணம் வெளிக்காட்டியது என்று நியூ யோர்கேர் என்ற அமெரிக்க செய்தி ஊடகம் மதிப்பீடு செய்தது.

பைடனின் இப்பயணத்தில் சௌதி அரேபியா எண்ணெய் உற்பத்தியளவை அதிகரிக்க இணங்க செய்வது என்பது,  கவனத்தை ஈர்க்கும் மிக முக்கிய அம்சமாகும் என்று நியூயார்க் டெம்ஸ் சுட்டிக்காட்டியது.

ஆனால், சௌதி அரேப்பிய தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியிட்ட அறிக்கையில், எண்ணெய் உற்பத்தியளவை பெருமளவில் அதிகரிக்கும் வாக்குறுதியை சௌதி அரேபியா அளிக்கவில்லை.

அதேவேளை, மத்திய கிழக்கு கூட்டணி அமைப்பு முறையை வலுப்படுத்தும் இலக்கை அமெரிக்கா நனவாக்கவில்லை. சீனாவையும் ரஷியாவையும் மத்திய கிழக்குப் பிரதேத்திலிருந்து விலக்கிக்கொள்ளும் இலக்கையும் நனவாக்கவில்லை. சௌதி அரேபியாவின் முக்கியமான வர்த்தக கூட்டாளியாகவும் எரிப்பொருள் சந்தையாகவும், முதலீட்டாளராகவும் சீனா விளங்குகின்றது.

மத்திய கிழக்குப் பிரதேசத்தின் வளர்ச்சியில் அமெரிக்கா ஒரு போதும் கவனம் செலுத்தவில்லை. மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்காவின் கருவிகளாகும் என்று உண்மைகளின் மூலம் அவர்கள் தெளிவாக அறிந்து கொண்டுள்ளன.