மனித உரிமையை மீறிய அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் மீதான சோதனை
2022-07-18 17:26:08

உயிரிழந்தவர்களுக்கு நியாயம் அளிக்கும் வகையில், அடக்கு முறை மற்றும் துன்புத்தலிலிருந்து பல்வேறு நாடுகளின் மக்களைப் பாதுகாக்கும் வகையிலும், போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கை மேற்கொண்ட அமெரிக்காவையும் பிரிட்டனையும் சர்வதேச சமூகம் முற்றிலும் புளனாய்வு செய்ய வேண்டும் என்று 18ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பிங் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவும் தனது கூட்டணிகளும், நீண்டகாலமாகவும் தொகுதியாகவும் மனித உரிமையை மீறி, வன்முறை செயல்களை மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய செயல்களை சுயமாகவே விமர்சனம் செய்யாத அமெரிக்காவும் பிரிட்டனும் இந்த உண்மைகளை மறைத்து வருகின்றன என்று வாங் வென்பிங் தெரிவித்தார்.