இந்தியாவில் குடியரசுத் தலைவரின் தேர்தல் தொடங்கியது
2022-07-18 17:48:20

இந்தியாவில் புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜுலை 18ஆம் நாள் முற்பகல் 10மணிக்கு தொடங்கியுள்ளது. சுமார் 4800 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு மாநிலங்களின் சட்டபேரவை உறுப்பினர்களும் வாக்களித்து வருகின்றனர்.

எதிர்கட்சி வேப்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை விட, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேப்பாளர் திரௌபதி முர்மு மேலும் அதிகமான வாக்குகளைப் பெற வாய்ப்பு உள்ளது என்று மதிப்பீடு செய்யப்பட்டது.

திரௌபதி முர்மு தேர்வில் வெற்றி பெற்றால், இந்திய குடியரசின் இரண்டாவது பெண் அரசுத்தலைவராகவும் பழங்குடி இனத்தில் இருந்து வந்த முதலாவது குடியரசுத் தலைவராகவும் அவர் இருப்பார்.