மற்ற நாட்டின் ஆட்சியைக் கவிழ்ப்பதில் தேர்ச்சி பெற்ற அமெரிக்கா
2022-07-18 19:17:55

அமெரிக்க அரசுத் தலைவரின் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான முன்னாள் உதவியாளர் போல்டன் அண்மையில் பேட்டியளித்த போது, மற்ற நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி சூழ்ச்சி செய்ய உதவியளித்ததை ஏற்றுக் கொண்டார். மேலும், மற்ற நாடுகளில் ஆட்சி கவிழ்ப்பைத் தூண்டிவிடுவது அமெரிக்காவுக்கு பழக்கமான விவகாரமாகும் என்று கூறப்படுகிறது.

இது பற்றிய கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 18ஆம் நாள் பதிலளிக்கையில், மற்ற நாடுகளின் ஆட்சியைக் கவிழ்ப்பது அமெரிக்காவின் தூதாண்மை கொள்கையில் ஆழமாக பதிந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். மேலும், மற்ற நாடுகளில் எதிர்க்கட்சிகள் அரசியல் பகைமையைத் தூண்டுவதற்கு அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் நேரடியாக ஆதரவளிக்கின்றனர். மற்ற நாடுகளில் தலையீடு செய்யவும் ஆட்சியைக் கவிழ்க்கவும் அமெரிக்காவுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒழுங்கானது, அமெரிக்க அரசியல்வாதிகள் கேட்டுக் கொள்ளும் ஒழுங்காகும் என்றும் அவர் தெரிவித்தார்.