இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு
2022-07-18 10:53:06

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதற்கு மத்தியில் அவற்றின் விலை ஞாயிறு இரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் ஆக்டேன்-92 பெட்ரோலின் விலை 20 இலங்கை ரூபாய் குறைக்கப்பட்டு, 450 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் ஆக்டேன்-95 பெட்ரோல் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டு 540 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் அந்நாட்டு பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதேபோல், டீசல் பொருள்கள் விலையும் 20 ரூபாயும், சூப்பர் டீசல் விலை 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.