சீனாவில் 5ஜி அடித்தள நிலையங்களின் கட்டுமானம்
2022-07-19 18:10:21

சீனாவில் மொத்தம் 18 லட்சத்து 54 ஆயிரம் 5ஜி அடித்தள நிலையங்கள் கட்டிமுடிக்கப்பட்டு சேவைக்கு வந்துள்ளன. இவற்றில் சுமார் 3 லட்சம் நிலையங்கள் இவ்வாண்டின் 2ஆவது காலாண்டில் கட்டிமுடிக்கப்பட்டவையாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 5ஜி சேவையும் ஒவ்வொரு கிராமத்திலும் அகன்ற அலைவரிசை இணைய வசதியும் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சத்தின் தகவல் தொடர்பு நிர்வாகத்தின் பொறுப்பாளர் 19ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தகவல் உள்கட்டமைப்பு கட்டுமானம், எண்ணியல் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடிப்படையை உருவாக்கியுள்ளது. இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் எண்ணியல் தொழில் சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தியுள்ளது. ஜுன் திங்கள் இறுதிவரை, மின்னணு தகவல் தயாரிப்பு, மென்பொருள், தொலைத்தொடர்பு மற்றும் இணையம் ஆகிய தொழில்களின் மொத்த வருமான அளவு 10 லட்சம் கோடி யுவானுக்கு மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.