வன்முறை செயல்கள் மீது நீதி விசாணை நடத்த வேண்டும்
2022-07-19 11:05:02

பிபிசி செய்தி ஊடகம், பிரிட்டன் ராணுவத்துக்கு வழங்கிய அறிக்கை, மின்னஞ்சல்கள், நிகழ்விட புகைப்படங்கள் முதலியவற்றின் புலனாய்வின்படி, ஆப்கானிஸ்தானிலுள்ள முன்னாள் பிரிட்டன் படைவீரர்கள், கைதிகள் மற்றும் ஆயுதமில்லா அப்பாவி மக்களை பல சமயங்களில் கொன்றுள்ளனர். அத்துடன் அவர்கள் கொலை போட்டியையும் நடத்தினர் என்று செய்தி வெளியிடப்பட்டது.

பிரிட்டனின் தி கார்டியன் நாளேடு வெளியிட்ட ஒரு கட்டுரையில், பிரிட்டன் வீரர்கள் ஆப்கானில் போர் குற்றம் இழைத்ததற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி மக்களைக் கொலை செய்தது, பிரிட்டன் படை மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானில் ஊடுருவிய அமெரிக்கப் படையினர், கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 1 இலட்சத்து 74 ஆயிரம் ஆப்கான் மக்கள் கொன்றுள்ளனர். அப்பாவி மக்களின் மீது பாய்ந்த குண்டுகள், மனித உரிமையைக் காரணமாகக் கூறும் நாடுகளின் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டவை. இது கேலிக்கூத்தாக உள்ளது. உயிரிழந்த அப்பாவிகளுக்கு நீதி வழங்க, சர்வதேச சமூகம் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.