இலங்கை அரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள்
2022-07-19 16:47:22

இலங்கை நாடாளுமன்றம் ஜுலை 19ஆம் நாள் கூட்டம் நடத்தி, அரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொண்டது. தற்போதுவரை, இந்நாட்டின் தற்காலிக அரசுத் தலைவர் ரணில் விக்ராமசிங்கே, பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டல்லாஸ் அலஹப்பெருமா, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமாரா திஸாநாயக்கே ஆகியோர் அரசுத் தலைவர் பதவிக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் புதிய அரசுத் தலைவர் 20ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.