16ஆவது சுற்று சீன-இந்திய தளபதி நிலை பேச்சுவார்த்தை
2022-07-19 19:03:00

சீன-இந்திய தளபதி நிலையிலான 16ஆவது சுற்று பேச்சுவார்த்தை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் சாவ் லிச்சியன் ஜுலை 19ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

இருதரப்பினரும், இரு நாட்டு தலைவர்களின் முக்கிய பொது கருத்தை வழிக்காட்டலாக கொண்டு, எஞ்சிய பிரச்சினைகளை வெகுவிரைவில் தீர்ப்பது குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். சீன-இந்திய எல்லையின் மேற்கு பகுதியின் பாதுகாப்பு மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்கவும் தூதாண்மை மற்றும் ராணுவ துறைகளில் தொடர்பை நிலைநிறுத்தவும் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். எஞ்சிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய திட்டத்தை வெகுவிரைவில் வகுக்க வேண்டும். இப்பேச்சுவார்த்தைக்கு பிறகு இருதரப்பும் செய்தியறிக்கை வெளியிட்டு, இப்பேச்சுவார்த்தைக்கு பாராட்டு தெரிவித்தன என்றார்.