வாங் யீ மற்றும் போனா தொடர்பு
2022-07-19 11:00:01

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பிரான்ஸ் அரசுத் தலைவரின் வெளிவிவகார ஆலோசகர் போனாவுடன் 18ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இரு நாட்டு அரசுத் தலைவர்கள், இரு நாட்டு உறவின் சீரான நிதானமான வளர்ச்சிக்கு நெடுநோக்கு திட்டத்தை முன்வைத்துள்ளனர். பிரான்ஸுடன் இணைந்து, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவை முன்னேற்றி, உயிராற்றல் வாய்ந்த வளர்ச்சியை நனவாக்க சீனா விரும்புகின்றது என்று வாங் யீ தெரிவித்தார்.

இரு நாடுகளின் உயர் அதிகாரிகளின் தொடர்புக்குப் பிரான்ஸ் முக்கியத்துவம் அளித்துள்ளது. புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையைக் கூடிய விரைவில் இரு நாடுகள் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன் என போனா தெரிவித்தார். உணவுத் தானியம் மற்றும் எரியாற்றல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சீனாவின் ஆக்கப்பூர்வ பங்குகளுக்குப் பிரான்ஸ் பாராட்டு தெரிவிக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.