தைவான் சுதந்திர சக்திக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்க கூடாது
2022-07-19 17:15:26

தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து அண்மையில் அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டது. அமெரிக்க பிரதிநிதி அவையின் தலைவர் பெலோசி தைவானில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இவை குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் சாவ் லிச்சியன் 19ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதையும் தைவானுடனான ராணுவ தொடர்பையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். அமெரிக்க அதிகாரி தைவானில் பயணம் மேற்கொள்வதையும் தைவான் நீரிணை நெருக்கடி நிலைமையை ஏற்படுத்துவதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். தைவான் சுதந்திரத்திற்கு ஆதரவு அளிக்காத கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.