வேளாண்மை பண்பாட்டு மரபுச்செல்வ மாநாடு துவக்கம்
2022-07-19 14:13:26

உலகின் முக்கியமான வேளாண்மை பண்பாட்டு மரபுச்செல்வங்களின் மாநாடு ஜுலை 18ஆம் நாள் சீனாவின் சேஜியாங் மாநிலத்தில் துவங்கியது. துணைத் தலைமை அமைச்சர் ஹு ச்சுன் ஹுவா துவக்க விழாவில் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வாழ்த்து கடிதத்தை வாசித்தார். பொது வேளாண்மை மரபுச்செல்வங்ளைப் பாதுகாத்து, கிராமப்புறங்களுக்கு பன்முகங்களிலும் புத்துயிர் ஊட்டுவது என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டில், ஜப்பான், தென்கொரியா, இலங்கை, வங்காளத் தேசம் முதலிய நாடுகளின் வேளாண்துறை அதிகாரிகள், சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதர்கள், சர்வதேச அமைப்புகளின் நிபுணர்கள் முதலியோர் இம்மாநாட்டில் பங்கெடுத்துள்ளனர். வேளாண்மை பண்பாட்டு மரபுச்செல்வங்கள், தானிய முறைமை, கிராமப்புறங்களின் தொடரவல்ல வளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாடு முதலிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. கடந்த 20 ஆண்டுக்காலத்தில், வேளாண்மை மரபுச்செல்வங்களைக் கொண்ட நாடுகள் நடத்திய மிக பெரிய உயர்நிலையிலான மாநாடு, இது என்பது குறிப்பிடத்தக்கது.