உணவுப் பாதுகாப்பில் உலக வளர்ச்சி முன்மொழிவின் நண்பர்கள் குழுவின் பொது நிலைப்பாடு
2022-07-19 16:48:51

76ஆவது ஐ.நா. பொது பேரவையில் உலகளாவிய உணவு நெருக்கடியைச் சமாளிக்கும் விதமான உயர் நிலை சிறப்புக் கூட்டம் ஜுலை 18ஆம் நாள் நடைபெற்றது. ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சாங் ஜுன் இக்கூட்டத்தில் பங்கேற்று, உலக வளர்ச்சி முன்மொழிவின் நண்பர்கள் குழுவின் சார்பில் நிகழ்த்திய உரையில், உணவுப் பாதுகாப்பு குறித்து இக்குழுவின் பொது நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார்.

சர்வதேசச் சமூகம் உடனே பொது நடவடிக்கையை மேற்கொண்டு, குறுகிய கால உணவு நெருக்கடியைக் கூட்டாகச் சமாளிப்பதோடு, உலக உணவு மற்றும் விவசாயத் துறையில் நீண்டகால ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், உணவு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு குறிப்பாக வளரும் நாடுகளுக்கு அவசர ஆதரவு அளிக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். உலக உணவு வினியோகச் சங்கிலி செவ்வனே இயங்குவதை பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.