லீக்கெச்சியாங்-உலகப் பொருளாதார மன்றத் தலைவர் சந்திப்பு
2022-07-20 10:10:02

சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் ஜுலை 19ஆம் நாளிரவு உலகப் பொருளாதார மன்றத் தலைவர் ஷ்வாபை காணொளி வழியாகச் சந்தித்துரையாடினார். அப்போது லீக்கெச்சியாங் கூறுகையில், சீன-உலகப் பொருளாதார மன்ற ஒத்துழைப்பு 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இம்மன்றம், பொருளாதார வளர்ச்சி, சீனாவுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றில் எப்போதும் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது. இரு தரப்பும் ஒத்துழைப்பை ஆழமாக்குவது, உலகின் பொருளாதார மீட்சி மற்றும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு ஊக்கமாகவும் துணையாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.

தற்போதைய உலகம், பல்வகை சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பன்னாடுகளிடையிலே பேச்சுவார்த்தையை முன்னெடுக்க விரும்புவதாகவும் ஷ்வாப் தெரிவித்தார்.