ஈரான், ரஷிய மற்றும் துருக்கி அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை
2022-07-20 14:05:00

ஈரான் அரசுத் தலைவர் ரைசி, ரஷிய அரசுத் தலைவர் புதின், துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன் ஆகியோர் 19ஆம் நாளிரவு ஈரானின் தலைநகரான தெஹரானில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அஸ்தானா செயல்முறையின் கட்டுக்கோப்புக்குள் சிரியாவின் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

சிரிய நெருக்கடியை அமைதியாகவும் தொடரவல்ல முறையிலும் தீர்ப்பதில் அஸ்தானா செயல்முறை முக்கியப் பங்காற்றியுள்ளது என்று இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சிரியாவின் இறையாண்மை, சுதந்திரம், ஒற்றுமை, உரிமைப் பிரதேச ஒருமைப்பாடு மற்றும் ஐ.நா. சாசனக் கோட்பாட்டுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவது ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளது.