பலதரப்பு வர்த்தக அமைப்பு முறைக்குச் சீன ஆதரவு
2022-07-20 10:34:36

உலகப் பொருளாதார மன்றத்தின் தொழில்முனைவோரின் காணொளி வழியிலான சிறப்புப் பேச்சுவார்த்தையில் சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 19ஆம் நாள் கலந்து கொண்டார்.

புதிய சுற்று தொற்றுநோய் உள்ளிட்ட எதிர்பாராத காரணிகளால் சீனப் பொருளாதாரம் குறையும் அழுத்தத்தை எதிர்நோக்குகின்றது. இதைச் சமாளிக்கும் வகையில், தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது, சீரான மீட்சி போக்கு காணப்படுகின்றது என்று அவர் கூறினார். அதேசமயம், உயர் நிலையான வெளிநாட்டுத் திறப்பைச் சீனா உறுதியாக விரிவாக்கும். சீனச் சந்தை உலகச் சந்தையாகும். வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் பன்முகங்களிலும் தொடர்ந்து சீனா திறந்தே இருக்கும். உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்ட பலதரப்பு வரத்தக அமைப்புமுறையைக் கூட்டாகப் பேணிகாத்து, தாதாள வர்த்தகம் மற்றும் நியாயமான வர்த்தகத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.