ரணில் விக்ரமசிங்கே: இலங்கையின் புதிய அரசுத் தலைவர்
2022-07-20 16:51:22

ஜுலை 20ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம், இடைக்கால அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கே 134வாக்குகளைப் பெற்று, அந்நாட்டின் புதிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்திய விக்ரணசிங்கே, நாடு எதிர்கொண்டுள்ள சிரமங்களைச் சமாளிக்கும் வகையில், பல்வேறு தரப்புகள் தன்னுடன் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.