பல பத்து ஆண்டுகளுக்கு அதிக வெப்ப பாதிப்பு நீடிப்பு
2022-07-20 19:17:34


 

தற்போது ஐரோப்பாவில் வெப்ப அலை அடுத்த வாரம் வரை தொடரும். அதிக வெப்பநிலை போன்ற காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, இந்த நூற்றாண்டின் 60ஆம் ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று உலக வானிலை அமைப்பு ஜுலை 19ஆம் நாள் தெரிவித்தது.

ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உலக வானிலை அமைப்பின் தலைமைச் செயலாளர் பெட்ரி தலாஸ் கூறுகையில், தீவிர வெப்பம் மனித குலத்தின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிப்பதோடு, வேளாண் உற்பத்திக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்தார்.