ஆள் கடத்தல் வியாபாரத்தில் அமெரிக்கா முதலிடம்
2022-07-20 18:40:54

ஆண்டுக்கான ஆள் கடத்தல் அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஜுலை 19ஆம் நாள் வெளியிட்டு, சீனா மீது தொடர்ந்து பழிதூற்றியது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பிங் 20ஆம் நாள் கூறுகையில், உண்மையிலே உலகளவில் ஆள் கடத்தல் வல்லரசு அமெரிக்காதான் என்று சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா உண்மைகளை எவ்வாறு மூடிமறைந்தாலும், அடிமை வியாபார நாடு என்ற தனது வரலாற்றுக் குற்றத்தை மறைக்க முடியாது. அமெரிக்கா எந்த சாக்குப்போக்கில் விளக்கம் அளித்தாலும், கட்டாய உழைப்புக்கான ஊற்றுமூலம், இடைவழி மற்றும் முனையம் என்ற தனது யதார்த்த குற்றத்தை மறைக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ஆள் கடத்தல் எதிர்ப்புக்காக 35 துறைகள் இடம்பெற்றுள்ள அமைப்புமுறை ஒன்றை சீன அரசு உருவாக்கி, தொடர்புடைய இயங்குமுறையை மேம்படுத்தி வருகிறது. ஆள் கடத்தலைத் தடுத்து ஒடுக்குவதற்கும், கடத்திச் செல்லப்பட்டவர்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்கும் இது உறுதியான உத்தரவாதம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.