2ஆவது சீன சர்வதேச நுகர்வு பொருட்காட்சி நடைபெறவுள்ளது
2022-07-20 17:12:29

2022ஆம் ஆண்டு சீன சர்வதேச நுகர்வு பொருட்காட்சியின் நிலைமை பற்றி  சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் 20ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

திறப்பு வாய்ப்பைப் பகிர்ந்து, இனிமையான வாழ்க்கையைக் கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பிலான 2022ஆம் ஆண்டு சீன சர்வதேச நுகர்வு பொருட்காட்சி, ஜுலை 25 முதல் 30ஆம் நாள் வரை சீனாவின் ஹெய்நான் மாநிலத்தின் ஹெய் கோ நகரில் நடைபெறவுள்ளது. தற்போது சீனாவின் நுகர்வு சந்தை மீட்சியடைந்து வருகின்றது. இந்நிலையில் கோவிட் 19 நோய் தொற்று தடுப்பை இப்பொருட்காட்சிக்கான ஆயத்தப் பணியுடன் ஒருங்கிணைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. நுகர்வு மீட்சியை முன்னேற்றுவது, சீன தனிச்சிறப்புடைய தாராள வர்த்தகத் துறைமுகத்தின் ஆக்கப்பணியை விரைவுப்படுத்துவது, சர்வதேச மற்றும் உள் நாட்டு சுழற்சிகளை முன்னேற்றுவது ஆகியவற்றுக்கு இப்பொருட்காட்சி துணை புரியும் என்று சீன வணிகத் துறையின் துணை அமைச்சர் சேங் ஜியு பிங் தெரிவித்தார்.