வெளிநாட்டுக்கான பண்பாட்டு வர்த்தகத்தில் சீனாவின் முன்னேற்றம்
2022-07-21 20:11:23

2021ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு பண்பாட்டு வர்த்தகத் தொகை முதன்முறையாக 20ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது. 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட இது 38.7விழுக்காடு அதிகம். திரைப்படம், தொலைக்காட்சி தொடர், இணைய இலக்கியம், புத்துணர்வு தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில், சீனாவின் ஏற்றுமதி விரைவாக அதிகரித்து, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேசமயம், சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற தரமிக்க புத்தகங்கள் போன்ற பொருட்கள் மற்றும் சேவைகள், பலவித பண்பாட்டுக்கான உள்நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. சீனாவுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையேயான பண்பாட்டு பரிமாற்றம் ஆழமான முறையில் வளர்ந்து வருகின்றது.

சீன வணிக அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் ஷு யூடிங் ஜுலை 21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் கூறினார்.

வெளிநாட்டு பண்பாட்டு வர்த்தகத்தின் தரமான வளர்ச்சியைத் தூண்டும் கருத்துக்கள் என்ற ஆவணத்தை, சீன வணிக அமைச்சகம் உள்ளிட்ட 27 வாரியங்கள் அண்மையில் கூட்டாக வெளியிட்டன.

இது குறித்து ஷு யூடிங் கூறுகையில், அடுத்தக் கட்டத்தில், வணிக அமைச்சகம் தொடர்புடைய வாரியங்களுடன் இணைந்து, இந்த ஆவணத்தின் நடைமுறையாக்கத்தைச் செவ்வனே செய்து, வெளிநாட்டு பண்பாட்டு வர்த்க வளர்ச்சியை முன்னேற்றும் என்றும் தெரிவித்தார்.