தைவானில் பயணம் மேற்கொள்ள கூடிய பெலோசியின் மீது சீனாவின் எதிர்ப்பு
2022-07-21 20:04:56

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை தலைவர் பெலோசி, சீனாவின் தைவானில்  மேற்கொள்ளக் கூடிய பயணம் குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கூறுகையில்,

இப்பயணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

பெலோசி, தைவானில் பயணம் மேற்கொண்டால், உறுதியான சமாளிப்பு மற்றும் பதிலடி நடவடிக்கையை சீனா கண்டிப்பாக மேற்கொள்ள நேரிடும் என்றார்.

பெலோசி தைவானில் பயணம் மேற்கொள்வதை உறுதியாக எதிர்க்கும் நிலைப்பாட்டை சீனா பல முறை தெரிவித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.