அரபு நாடுகளில் மேற்கத்திய ஜனநாயகம் மீதான நம்பிக்கை இழப்பு
2022-07-21 20:07:23

அரபு பாரமீட்டர் எனும் சர்வதேச கருத்து கணிப்பு நிறுவனம் அண்மையில் 9 நாடுகளைச் சேர்ந்த 23000 மக்களிடையில் ஆய்வு மேற்கொண்டு, ஜுலை தொடக்கத்தில் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது. அவற்றின்படி, அரபு நாடுகளின் பொது மக்கள் பெரும்பாலும் மேற்கத்திய ஜனநாயத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். அதோடு, சீன மாதிரியின் ஈர்ப்பாற்றல் அதிகரித்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது, சமூக ஒழுங்கைப் பேணிக்காப்பது, அரசு உறுதியுடன் செயல்படத் தூண்டுவது ஆகியவற்றுக்கு மேற்கத்திய ஐனநாயகம் சாதமாக இல்லை என கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவிலுள்ள அரபு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிகமாக கருதுகின்றனர் என்று மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் ஜனநாயகம் என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிரவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் மூலம் சீனா மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பிரதேசங்களுடனான பொருளாதாரத் தொடர்பை வலுப்படுத்தியுள்ளது. ஆனால், அமெரிக்கா இப்பிரதேசங்களில் தனது செலவைத் தொடர்ந்து குறைத்து, நெடுநோக்கு மையத்தை ஆசிய-பசிபிக் பிரதேசத்துக்கு மாற்றி வருகிறது. எனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 9 நாடுகளில் மொராக்கோவைத் தவிர்த்து, இதர 8 நாடுகளின் பார்வையில் அமெரிக்காவை விட சீனா மேலும் வரவேற்கத்தக்கதாக உள்ளது. இது மட்டுமல்லாமல், பொருளாதாரத்துக்கு அமெரிக்கா கடும் அச்சுறுத்தலாகும் என இந்த 8 நாடுகளில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதியினர் கருதுகின்றனர் என்று மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் சீனா-அமெரிக்கா இடையேயான போட்டி பற்றிய பொது மக்களின் கருத்து என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையின் இறுதியில், காலனித்துவம் இல்லாத சீனா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க விவகாரங்களில் தலையீடு செய்யாமல் இருப்பதால், எதிர்காலத்தில் அமெரிக்காவை விட மேலும் பெரும் வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.