ஆசிய வளர்ச்சிக்கான கணிப்பைக் குறைத்துள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி
2022-07-21 17:41:38

ஆசிய வளர்ச்சி வங்கி ஜுலை 21ஆம் நாள் 2022ஆம் ஆண்டிற்கான ஆசிய வளர்ச்சி முன்னாய்வுக்கான இணைப்பு அறிக்கையை வெளியிட்டது. இதில், ஆசிய-பசிபிக் பிரதேசத்திலுள்ள வளரும் பொருளாதாரச் சமூகங்களின் 2022ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி கணிப்பு 5.2 விழுக்காட்டிலிருந்து 4.6 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய் தொற்று, உக்ரைன் நெருக்கடி, வளர்ந்த பொருளாதாரச் சமூகங்களின் மேலும் தீவிரமான நாணய இறுக்க கொள்கை உள்ளிட்டவை, இப்பொருளாதாரச் சமூகங்களின் வளர்ச்சி கணிப்பு குறைக்கப்பட்டதற்கான முக்கிய காரணங்களாகும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மதிப்பீட்டின்படி, தெற்காசியாவில் நடப்பு ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 விழுக்காடாகவும், கிழக்காசியாவில் இவ்விகிதம் 3.8 விழுக்காடாகவும், தென் கிழக்காசியாசவில் இவ்விகிதம் 5 விழுக்காடாகவும், மத்திய ஆசியாவில் இவ்விகிதம் 3.8 விழுக்காடாகவும், பசிபிக் பிரதேசத்தில் இவ்விகிதம் 4.7 விழுக்காடாகவும் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.