உலக இளைஞர்கள் வளர்ச்சி மன்றக்கூட்டத்துக்கு ஷிச்சின்பிங்கின் வாழ்த்துகள்
2022-07-21 16:25:05

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 21ஆம் நாள் உலக இளைஞர்கள் வளர்ச்சி மன்றக் கூட்டத்துக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினர்.

ஷிச்சின்பிங் கூறுகையில், இளைஞர்கள் நம்பிக்கையின் சின்னமாக உள்ளவர்கள். அவர்கள் எதிர்காலத்தை உருவாக்குப்பவர்கள். சீனாவில் இளைஞர்கள் எப்போதும் சமூக வளர்ச்சியைத் தூண்டும் சக்தியைக் கொண்டவர்கள். மனித குல பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தில் பங்காற்ற இளைஞர்களுக்கு சீனா ஊக்கமளித்து வருகின்றது என்று தெரிவித்தார்.

மேலும், பல்வேறு நாடுகளின் இளைஞர்கள் உலக வளர்ச்சியையும் உலகம் முழுவதும் இளைஞர்களின் வளர்ச்சியையும் மேம்படுத்தும் முக்கிய மேடையாக,  உலக இளைஞர்கள் வளர்ச்சி மன்றம் இருக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

தவிரவும், அமைதி, வளர்ச்சி, நியாயம், நீதி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆகிய கருப்பொருட்களைக் கொண்ட பொது கருத்தை பல்வேறு நாடுகளின் இளைஞர்கள் வெளிக்கொணர்ந்து, நடைமுறை செயல்களின் மூலம் உலக வளர்ச்சி முன்மொழிவை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.