காணொளி வழியில் வேலை விண்ணப்பம்
2022-07-21 14:39:15

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பைக் கண்டறிய உதவும் வகையில், சீன ஊடகக் குழுமம்,சீன அரசவை அரசுச் சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையம், தேசிய வளர்ச்சி மற்றும் முதலீட்டு குழு நிறுவனத்தின் மனித வளச் சேவை நிறுவனம் ஆகியவை தேசிய வேலைவாய்ப்பு நடவடிக்கை தளத்தைக் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன. மாணவர்களுக்கு காணொளி வழியில் வேலை விண்ணப்பம் மற்றும் நேர்முகத் தேர்வுக்கான வாய்ப்பை இத்தளம் வழங்குகின்றது. 

இத்தளத்தின் பயனுள்ள தேடல் திறன்களை மாணவர்கள் மிகவும் வரவேற்கின்றனர். நிறுவனங்களும் மாணவர்களும் காணொளி வழியில் நேர்முகத் தேர்வு மற்றும் தர மதிப்பீடு செய்யலாம். இது தொற்றுநோய் பரவல் காலத்தில் நேருக்கு நேர் ஆள் தேர்வு நடத்த முடியாத பிரச்சினையைத் தீர்க்கிறது.

2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டின் ஜூன் இறுதி வரை, இத்தளத்தின் மூலம் 30 இலட்சத்து 50 ஆயிரம் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இத்தளத்தில் சேர்ந்துள்ளன.