வெளிநாட்டு மாணவர்கள் சீனாவுக்குத் திரும்புவதற்கு முயற்சி மேற்கொண்டு வரும் சீனா
2022-07-21 19:53:36

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஜுலை 21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், இந்திய மாணவர்கள் சீனாவுக்குத் திரும்பி தொடர்ந்து கல்வி பயில்வது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தார்.

சீனாவின் முயற்சியுடன், பல நாடுகளின் மாணவர்கள் சீனாவுக்குத் திரும்பி தங்கள் படிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர். இந்திய மாணவர்கள் சீனாவுக்குத் திரும்புவது குறித்து தொடர்புடைய துறைகள் தொடர்பு மேற்கொண்டு, ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் அடைந்துள்ளன. இருநாடுகளின் பொறுப்பான துறைகள் தொடர்ந்து நெருக்கமான பரிமாற்றத்தை மேற்கொண்டு, முதல் தொகுதி இந்திய மாணவர்கள் கூடிய விரைவில் சீனாவுக்குத் திரும்பி மீண்டும் படிப்பைத் தொடங்கும் விதம் பாடுபட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.