காட்டு விலங்கு பாதுகாப்பில் இந்திய-நமீபிய ஒத்துழைப்பு
2022-07-21 11:29:56

காட்டு விலங்கு மற்றும் தொடரவல்ல பல்லுயிர் பாதுகாப்பு பற்றி இந்தியாவும் நமீபியாவும் 20ஆம் நாள் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளன.

இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபந்தேர் யதாவ், இந்தியாவில் பயணம் மேற்கொண்ட நமீபிய துணை அமைச்சரும் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சருமான நெட்டம்போ நந்தி-டைட்வா ஆகிய இருவர் இதில் கையொப்பமிட்டன.

இவ்வொப்பந்தத்தின்படி, நமீபியாவிலிருந்து சில சிறுத்தைப்புலிகள் இந்தியாவின் வனப் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும். சுதந்திரம் பெற்ற பின், சிறுத்தைப்புலி இந்தியாவில் அழிந்து போய்விட்ட ஒரேயொரு பெரிய ஊனுண்ணி வகையாகும். 75ஆவது சுதந்திர தின நிறைவைக் கொண்டாடும் இவ்வாண்டில் அவற்றை மீண்டும் இந்தியாவில் உட்புகுத்தப்படவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று தொடர்புடைய இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.