ரஷியா மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடை நடவடிக்கைகள்
2022-07-22 16:23:16

ரஷியா மீது மேலதிக தடை நடவடிக்கைகளை விதிப்பதற்கான ஐரோப்பிய ஆணையத்தின் கருத்துருவை ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சில் ஜுலை 21ஆம் நாள் ஏற்றுக் கொண்டது. அதன்படி, ரஷிய தங்கத்தின் இறக்குமதி மீது தடை விதிக்கப்படுவது தவிர, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டிலுள்ள பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ரஷியா மீது ஐரோப்பிய ஒன்றியம் பல ஆண்டுகளாக அழுத்தம் தணிக்கும் கொள்கை பயன் அளிக்காத நிலையில் வீணாகும். ஆனால் உலகப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் இதனால் ஏற்பட்ட தீய விளைவு மென்மேலும் தெளிவாக உள்ளது என்று தெரிவித்தார்.