சீனாவின் நீர் வள செலுத்தல் திட்டப்பணியின் பங்கு
2022-07-22 20:01:26

சீனாவின் தெற்கிலிருந்து வடக்கிற்கு நீர் வளத்தை எடுத்துச் செல்லும் திட்டப்பணி குழுமத்திலிருந்து கிடைத்த தகவலின் படி, ஜுலை 22ஆம் நாள் வரை, இத்திட்டப்பணியைச் சேர்ந்த தாவ் சா கால்வாய் மூலம் முதன்மை கால்வாய்க்கு 5000 கோடி கனமீட்டர் நீர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது 8 கோடியே 50 இலட்சத்துக்கும் மேலான மக்களுக்கு நன்மை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீர் மூலத்தின் தரப் பாதுகாப்பு பணியை வலுப்படுத்துவதன் மூலம், பொது மக்களின் குடி நீர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டப்பணியின் மூலம், வேளாண் துறை, தொழிற்துறை, அன்றாட வாழ்க்கை, இயற்கை சூழல் ஆகியவற்றிற்கு போதுமான நீர் வினியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.