உலக இளைஞர்கள் வளர்ச்சி மன்றக் கூட்டத்துக்கு ஐ.நா.தலைமைச் செயலாளரின் உரை
2022-07-22 18:43:05

இளைஞர்களின் வளர்ச்சியை முன்னேற்றுவது, கூட்டு எதிர்காலத்தை உருவாக்குவது ஆகியவற்றை தலைப்பாக கொண்ட உலக இளைஞர்கள் வளர்ச்சி மன்றக்கூட்டம் ஜூலை 21ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இதற்கு ஐ.நா. தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்ரைஸ் காணொலி வழியாக உரைநிகழ்த்தியபோது, அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பங்கெடுப்பதற்கு பல்வேறு நாடுகள் பெரிதும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.