அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை 9 கோடி
2022-07-22 11:10:18

ஜுலை 21ஆம் நாள் அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று எண்ணிக்கையும், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் முறையே 9 கோடி மற்றும் 10.2 இலட்சத்தைத் தாண்டியுள்ளன. உலகளவில் மிகவும் அதிகமான கரோனா நோயாளிகள் மற்றும் உயிரிழந்தோர் கொண்ட நாடு அமெரிக்கா தான்.

உலகில் ஒரேயொரு மிக பெரிய வல்லரசு அமெரிக்கா ஆகும். நோய் பரவலைத் தடுக்கத் தவறியது, அமெரிக்க அரசியல் அமைப்பு முறை மற்றும் நாட்டின் மேலாண்மை செயலிழக்கும் நிலையில் இருப்பதைக் காட்டியுள்ளது.

இடைக்காலத் தேர்தலை நெருங்கி வரும் வேளையில், பணவீக்க விகித உயர்வு, துப்பாக்கி வன்முறை முதலியவை ஏற்படுவதுடன், எதிர்வரும் சில மாதங்களில் மேலும் சிக்கலான சவால்களை அமெரிக்கா சந்திக்கக் கூடும். இதைத் தவிர, புதிய சுற்று நோய் பரவல் இலையுதிர்காலத்தில் வரும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.