அமெரிக்க அரசுத் தலைவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி
2022-07-22 11:08:41

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுக்கு கொவிட்-19 நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், நோய் தொற்று அறிகுறிகள் குறைவாக உள்ளது என்றும் வெள்ளை மாளிகை 21ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்வறிக்கையில் பைடனுக்கு 2 தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் வழிகாட்டலின்படி, நியூக்ளிக் அமில பரிசோதனையில் எதிர்மறை அறிவிக்கப்படும் வரை, வெள்ளை மாளிகையில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டு, அனைத்து கடமைகளையும் தொடர்ந்து நிறைவேற்றவுள்ளார். தற்போது பைடன் தொலைப்பேசி மூலம் வெள்ளை மாளிகையின் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

பைடனுடன் நெருங்கிய தொடர்புடையவர்களிடம், இத்தகவலை வெள்ளை மாளிகை தெரிவிக்குமென குறிப்பிடப்பட்டது.